Sunday 15 May 2011

(தே.மு.தே.பி) தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் ஜோக்ஸ்

                                              (தே.மு.தே.பி)
     எதோ புதுக்கட்சியோட பேரு இல்லைங்க.(தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு
பின்) ஜோக்ஸ் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல சும்மா சிரிப்புக்காக
படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.
                                                 தேர்தல்(தேர்தள்)
          1 . "இங்கே தேர்தலுக்கு பணம் கொடுக்கிறதா கேள்விப்பட்டு
வந்தோம்  உண்மையா?"
                "சத்தியமா இல்லைங்க இந்த பழுதான தேர் தள்ள பணம்
கொடுத்ததை யாரோ தேர்தல் என்று தப்பா சொல்லியிருக்காங்க....!!!"

       2.  "தலைவரு ஏன் ரொம்ப கோபத்துல இருக்காரு?"

            "தேர்தல் செலவு கணக்கு எல்லாத்தையும் சரியா எழுதி
வைங்க பின்னாடி தேவைப்படும் என்று சொன்னாரு!!

            "அதெல்லாம் தேர்தல்ல ஜெயிக்கிறவங்களுக்குத்தான்
உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்களாம் அதான்
கோபத்துல இருக்காரு...!!!"

       3. "தேர்தல் நேரத்துல புத்தகம் வெளியிட்டதற்காக
இவரை போலீஸ் கைது செய்துட்டாங்க...!!!"

           "அப்படியா ! அப்படி என்ன புத்தகம் வெளியிட்டாரு?"

        "வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 1000 வழிகள்"-என்ற
புத்தகத்தை வெளியிட்டாராம்...!!!"

      4."ஒரு பெக் ரம்-ல கூட ஊழல் பண்ண முடியுமா?'

        "" ஐயோ தலைவரே அது ஸ்பெக்ட்ரம் ஊழல்..!!!""

       5."ஆமா நம்ம தலைவரு கிரிக்கெட் மேட்ச்  பார்க்க போனா
எப்பவும் விஐபி சீட்டுதான் கேட்பாரு இப்ப புதுசா தரைசீட்டு
கேட்கிறாரே என்ன காரணம்?"

           "அதுவா வேறஒன்னுமில்ல சியர்ஸ் லீடர்ஸ் ஆடுறத
பக்கத்துல இருந்து பார்த்து ஜொள்ளுவிடத்தான்...!!!""

       6.    மின் வாரியத்தில் நேர்முகத்தேர்வு
அதிகாரி:     உங்க பேர் என்ன?
வந்தவர்:    அமாவாசை
அதிகாரி:    எந்த ஊர்?
வந்தவர்:   இருட்டு பள்ளம்
அதிகாரி:   உங்களுக்கு பிடித்த இனிப்பு வகை?

வந்தவர்:   இருட்டு கடை அல்வா
அதிகாரி:   உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்?
வந்தவர்:    .................
அதிகாரி:    யார்யா மின்விசிறிய நிறுத்தியது?
மின் வாரிய அலுவலர்:   கரண்ட் கட் சார்!!!!!!!!

                                               தத்துவம்
    "ஸ்பெக்ட்ரம் பெரிய ஊழல் தான் அதுக்காக அதுல இருக்கிற
பெக் ரம்-ம எடுத்து குடிக்கவா முடியும்.""
                                                ---டாஸ்மாக்குல மப்புல மல்லாந்து 
படுத்துக்கொண்டே யோசிப்போர் சங்கம்---

                            ""கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை"-
(புது வரவு) மக்கள் எனக்கு ஒய்வு அளித்துவிட்டார்கள்.

                                   நான் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை பொதுவாக
சிரிக்க மட்டும் மீண்டும் சந்திப்போம் மாமியார்,மன்னர்,டாக்டர்
ஜோக்குகளுடன்.
                                                                     நன்றி வணக்கம்
                                                            செந்நெல்குடி க.பார்த்திபன்
                                                                                 சிங்கப்பூர்.  

Monday 2 May 2011

கடி ஜோக்ஸ்

                  பொதுவாக எனக்கு புத்தகத்தில் வரும் ஜோக்ஸ் மற்றும் கடி ஜோக்ஸ் இவற்றை படிக்க பிடிக்கும். எத்தனை நாளைக்குத்தான் ஜோக்ஸ் படித்துக்கொண்டே இருப்பது நாமளும் ஜோக் எழுதினால் என்ன என்று யோசித்து தினமணி சிறுவர் மணியில் வெளிவரும் கடிஜோக்ஸ் பகுதிக்கு
எனது முதல் கடியை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினேன்.கடி என்றவுடன் வாய் அதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது எனவே முதல் கடியை வாய்க்கால் என்ற சொல்லிலே ஆரம்பித்தேன்.எனது முதல் கடி புத்தகத்தில் வந்தது பின் அதைத்தொடர்ந்து சில கடிகளும் வெளிவந்தது.
               பதிவுலக நண்பர்களே கடியை படித்து உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

               கடி சிறியதாக தெரிந்தால் அதைப்பெரிதுபடுத்தி பார்த்துக்கொள்ளவும்






                     கடியை படித்துவிட்டு காதுகளில் ரத்தம் வந்தால் நான் பொறுப்பாக முடியாது.

              (மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக்கொள்வதன் மூலமாகத் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும் -ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் ஜேம்ஸ் )
                                                                                                              
                                மேலும் கடி மற்றும் ஜோக்ஸ் இவற்றுடன் உங்களை சந்திக்கிறேன்.

                                                                  நன்றி.      வணக்கம்.

                                                             செந்நெல்குடி க.பார்த்திபன்,
                                                                                     சிங்கப்பூர்.




Saturday 23 April 2011

புலம் பெயர்ந்த தமிழ்

               

தமிழன் மட்டுமா

புலம் பெயர்ந்தான்?              

தமிழும் தான்

புலம் பெயர்ந்தது,

ஆம்!! அன்று

கல்வெட்டிலிருந்து                                                                                    

இன்று கையடக்க                                              

தொலைபேசி வரை!!!                


                                                 ( சிங்கப்பூர் தமிழ் வானொலியில் ஒரு
 தமிழ் புத்தாண்டு அன்று ""தமிழ்"" என்ற வார்த்தையில்
குட்டி கவிதை அதாவது ஹைக்கூ போட்டி நடைபெற்றது.
 அதில் நான்  இதை நான் குறுஞ்செய்தி மூலம் பங்கேடுத்து
(ஒலி 96.8) ஒலிக்குவளை பரிசாக பெற்றேன்.)


           இது உங்களுக்கு பிடித்திருந்தால் படித்துவிட்டு உங்கள்
ஆதரவையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

                                                       செந்நெல்குடி க.பார்த்திபன்.


(உற்சாகமில்லாமல் பெரிதாக எதுவுமே எப்போதுமே
சாதிக்கப்பட்டதில்லை).             -ரால்ஃப் வால்டோ எமர்சன்-





Friday 22 April 2011

எனது முதல் பதிப்பு

    பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல்
பதிப்பு  உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் எப்பொழுதும் வேண்டும். பல
நண்பர்களின் பதிவுகளை படித்து ரசித்து அதனால் வந்த ஆர்வத்தினால்
நானும் எனக்குத்தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகின்றேன்.அதற்கு உங்கள் ஆதரவை வேண்டும்.

                                                                                என்றும் அன்புடன்
                                                                       
                                                                           செந்நெல்குடி  பார்த்திபன்.

              (நீங்கள் உங்களால் முடியும் என்று நினைத்தாலோ அல்லது
முடியாது என்று நினைத்தாலோ இரண்டுமே சரிதான்)
                                                                                               -ஹென்றி ஃபோர்ட்-

    இதனால நான் சொல்வது என்னவென்றால் எனக்கு ஆதரவு தர
   உங்களால் முடியும் என்று நம்புகின்றேன்.

                                           நன்றி மீண்டும் சந்திப்போம் பதிவுலகில்.